Sunday, November 7, 2010

வழியும் என் கண்ணீரே





வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு


இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...


என்னுடன் நீயாவது  எனக்காக  நிரந்தரமாக வருவாயா?






- நிலவு

இடைவெளி








உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...

நம் நட்பிற்குள்   உள்ள 
ஒரு சிறு இடைவெளியை  

நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்

திடீர் என்றொரு மின்னல் கீற்று.....

மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........

இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?

விடை தெரியாமல் நாம்.....!


- நிலவு

Wednesday, October 20, 2010

உடைந்தது இதயம்







என்னை  வெறுப்பது  உன்  குற்றமா ...?
நான்  உன்னை வெறுப்பது  என்   குற்றமா ..?    
                         
 இருப்பினும்.......

உனக்காக  வாங்கி வந்த பரிசை 
மட்டுமல்ல  என்  இதயத்தையும் அன்போடு 
உன்னிடம்    கொடுத்தேன்......
தூக்கி  எறிந்துவிட்டாய்  ....!


ஹம்ம்........!

 தூக்கி எரிந்தது என் பரிசை மட்டுமல்ல
 என் இதயத்தையும் கூட
 சுக்கு நூறாக என் இதயம்


- நிலவு

என் முதல் சுவாசம்









என் தாயின் கருவறையை  பிரிந்தனால்...
என் முதல் சுவாசமும் அழுகையில்....!


உன் இதயவரையை பிரிந்ததனால்
என் கடைசி சுவாசமும்  அதே அழுகையில்....!








- நிலவு

Saturday, September 4, 2010

நீ அறிவாயா?













உறவுகள் இல்லை

என்று ஏங்கி தவித்தாய்

உறவாக நான் உனக்கும்

உயிராக நீ எனக்கும்.....

என்று.....

*****
உனக்கு நான் ஆறுதலாக

எனக்கு நீ ஆறுதலாக

******


இன்று உறவுகளோடு நீ.....!

******


நான் மட்டும் தனிமயரையில்

உன் நினைவுகளோடும்

கண்களில் கண்ணீரோடும்

******
பாவாம் நீ...

என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு

கூட அர்த்தம் புரியாமல்...

ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!



- நிலவு

Wednesday, September 1, 2010

உன் குரல்.









அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....


என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..




உன் குர‌ல் கேட்காத‌
அழ‌கான‌ அதிகாலை
கூட‌ இன்று
அல‌ங்கோல‌மாய்....

முடிய‌வில்லை
உனை அழைக்க‌முய‌ன்றாலும்
முடியா எட்டாதூர‌த்தில்
என்னை ம‌ற‌ந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்

நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த‌ நாள் இனிய‌நாள்
என‌க்கு...





சிநேகிதி