Showing posts with label ரசித்த கவிதைகள். Show all posts
Showing posts with label ரசித்த கவிதைகள். Show all posts

Wednesday, September 1, 2010

உன் குரல்.









அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....


என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..




உன் குர‌ல் கேட்காத‌
அழ‌கான‌ அதிகாலை
கூட‌ இன்று
அல‌ங்கோல‌மாய்....

முடிய‌வில்லை
உனை அழைக்க‌முய‌ன்றாலும்
முடியா எட்டாதூர‌த்தில்
என்னை ம‌ற‌ந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்

நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த‌ நாள் இனிய‌நாள்
என‌க்கு...





சிநேகிதி

Sunday, August 22, 2010

கருவறைச் சுகம்

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்

உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின் மத்தியிலே

என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை

என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது


என் உலகம்

மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்-  சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!

உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

         -ஜாவிட் ரயிஸ்


.

விதி வைத்த முற்றுப்புள்ளி

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய்  பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

          -ஜாவிட் ரயிஸ்




.

சிறகிழந்து போனேன் தோழி

சகியே!- என் சகியே
தனியே நான் நீயெங்கே?

 
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?

 
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே

 
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்

 
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!


  -ஜாவிட் ரயிஸ்

.

என்னையும் கவிஞன் ஆக்கியதற்கு நன்றி!!!

என்னையும் கவிஞன் ஆகியதற்கு நன்றி!!!

அன்று என் புன்னகை கவிதை ஆகியது !
இன்று என் கண்ணீர் கவிதை ஆகியது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று உலகை நான் ரசித்தேன் !
இன்று உலகம் என்னை ரசிக்கிறது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நீ என் அருகில் - என் நினைவில் நீ !
இன்று நீ தொலைவில் - என் நினைவில் நீயே !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்கபோவதை யோசித்தேன் !
இன்றோ நடந்ததை நேசிக்கிறேன் !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்காது என்ற பொது நடந்தது...
நடக்கும் என நினைத்த பொது முடிந்தது...
முடிந்ததெல்லாம் இன்று வடிந்தது...
நீயி...
நீராய்...
கண்ணீராய் .....

என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....


Regards,
Vijee

இதயத்திருடன்