Saturday, September 4, 2010

நீ அறிவாயா?













உறவுகள் இல்லை

என்று ஏங்கி தவித்தாய்

உறவாக நான் உனக்கும்

உயிராக நீ எனக்கும்.....

என்று.....

*****
உனக்கு நான் ஆறுதலாக

எனக்கு நீ ஆறுதலாக

******


இன்று உறவுகளோடு நீ.....!

******


நான் மட்டும் தனிமயரையில்

உன் நினைவுகளோடும்

கண்களில் கண்ணீரோடும்

******
பாவாம் நீ...

என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு

கூட அர்த்தம் புரியாமல்...

ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!



- நிலவு

Wednesday, September 1, 2010

உன் குரல்.









அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....


என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..




உன் குர‌ல் கேட்காத‌
அழ‌கான‌ அதிகாலை
கூட‌ இன்று
அல‌ங்கோல‌மாய்....

முடிய‌வில்லை
உனை அழைக்க‌முய‌ன்றாலும்
முடியா எட்டாதூர‌த்தில்
என்னை ம‌ற‌ந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்

நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த‌ நாள் இனிய‌நாள்
என‌க்கு...





சிநேகிதி

Tuesday, August 31, 2010

நட்பு பாதை








தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....

தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....

*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......

நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்

*********
இன்று நீயே....

பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி

நீ எங்கோ நான் எங்கோ....

**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!

*********
நட்புடன்...

- நிலவு

Wednesday, August 25, 2010

ஹலோ!

நீ என்னுடன் பேசாவிட்டாலும்
நான் உன்னுடன் பேசாவிட்டாலும்
உன் "ஹலோ"
என்ற குரலை கேட்க
தினம் உன் தொலைபேசி
என்னை சுழற்றுகிறேன்
உனக்கு தெரியுமா? 

- நிலவு 


.

பிரிவு

பாதியில் பிரிந்து சென்றாய்!
பாவை மனதை
பறித்து சென்றாய்!
போனது போய்விட்டாய்


ஏன் உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் சென்றாய்?
உன் நினைவுகளால்
உருகி... உருகி...
என் உயிரையும்
பிரித்து செல்லத் தானோ?   


- நிலவு 




/

Monday, August 23, 2010

உன் இதயத்திடம் கேள்!

யாரை நேசிக்கிறாய்
என்று
என்னிடம் கேட்காதே!

உன் இதயத்திடம் கேள் !

காரணம்...
என் இதயம் உன்னிடத்தில்


- நிலவு 


.