Sunday, September 11, 2011
Friday, May 20, 2011
புரிந்துகொண்டேன்
என்று இருந்தேன்....!
உன் பிரிவில்
உன் பிரிவில்
நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!
-நிலவு
Tuesday, May 3, 2011
தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...
காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!
பாசத்தை தேடி வெகுதுரம்
பயணித்தும் வெறும்
கானல்கள் மட்டுமே
என் கண்களை ஏமாற்றி ..
வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே
என்னை பின் தொடர்கின்றது.....!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Saturday, April 30, 2011
உன் மனசாட்சியை தொட்டு
தோழனே....! என்னை பிடிக்கும்
என்று தான் சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான் பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் ?
உன் மனசாட்சியை தொட்டு சொல்லிவிடு
என் மனதை தொடுவதற்காக சொல்லி விடாதே .....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
நம் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாக உன்னை பிரிகின்றேன்....
நீ நிரந்தரமாக என்னை பிரிவதற்குள்......!
கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறக்க வைக்கின்றேன் ....!
நான் ... நிரந்தரமாக மறைவதற்குள்...!
நான் உன் பிரிவை தாங்க வேண்டும்.....!
நீ என் மறைவை தாங்க வேண்டும்......!
-நிலவு
என் மனம் சொல்கின்றது
நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....
உதடுகள் புன்னகைத்தது
என் கவிதைகளில் நீ என்
தோழனாயிருந்தாய்,
நீ தோழனாய் மட்டுமல்ல
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று
மனது மட்டும்
அழுதுகொண்டே சொன்னது....!
என்னை விட என் கவிதைகள்
உன்னை காதலிதிருகின்றன....!
- நிலவு
Subscribe to:
Posts (Atom)





