Saturday, April 30, 2011

என் மனம் சொல்கின்றது








நான் உனக்காக எழுதிய கவிதைகளை

உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....

மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....

உதடுகள் புன்னகைத்தது


என் கவிதைகளில் நீ என்

தோழனாயிருந்தாய்,



நீ தோழனாய் மட்டுமல்ல

நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று

மனது மட்டும்

அழுதுகொண்டே சொன்னது....!



என்னை விட என் கவிதைகள்

உன்னை காதலிதிருகின்றன....!



- நிலவு

சிறு குழந்தையாய் .....!








வேண்டாம் என்று உதறி தள்ளியது உன் உறவு

வேண்டும் என்று கை கொடுக்கின்றது நட்பு



வேண்டாம் என்று உதறிய உறவை தொடரவா?

கை கொடுக்கும் நட்பை தொடரவா ?


விடை புரியாமல் தடுமாறுகின்றேன்

 சிறு குழந்தையாய் .....!




- நிலவு

Tuesday, April 5, 2011

சுடும் நிலவு

தூரத்தில் நிலவை பிடிக்காதவர் யார் ??

 கொஞ்சம் நெருங்கித்தான் பார் சுட்டுவிடும் என்றேன் ...!


ஹ்ம்ம்..........!நெருங்கித்தான்

பார்ப்போமே......சுற்றுவிடவா போகிறது என்றாய்....!

நெருங்கியும் பார்த்தாய்...!

 இன்று


சுட்டு விட்டதோ நிலவு ?



நீ ஒரு துருவம் நான் ஒரு துருவமாய்.....

நாம் இன்று விழகி நிற்கின்றோம்....!


அன்று ரசிகனாய் ரசித்த நிலவு

உனக்கு பிடித்த நிலவு


இன்று உனக்கு பிடிக்காத நிலவு....!


உன்னிடம் இருந்து தூரமாக

நிற்கும் அதே நிலவு .....!



இப்படிக்கு நிலா.....








- நிலவு

நம் பிரிவு



கொஞ்சம் கொஞ்சமாக உன்னை பிரிகின்றேன்....
நீ நிரந்தரமாக என்னை பிரிவதற்குள்......!

கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறக்க வைக்கின்றேன் ....!
நான் ... நிரந்தரமாக மறைவதற்குள்...!


நான் உன் பிரிவை தாங்க வேண்டும்.....!
நீ என் மறைவை தாங்க வேண்டும்......!

-நிலவு











Sunday, December 5, 2010

நீ , நான் , நிலவு




நீ , நான் , நிலவு 
எல்லாம் கனவாய் போனது 
நீயும் இல்லை நிலவும் இல்லை
நான் மட்டும் , நம்  நினைவுகளோடு
தனிமையில்....


- நிலவு

Saturday, December 4, 2010

நினைவுகளே தொலைந்துவிடு







தினம் தினம் கனவில் உன் முகம்
மறக்க நினைக்கும் உன் நினைவுகளை
ஜாபகப்படுதிக்கொண்டு.....



*********


பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள்  இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....

*********



மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது  முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
**********


உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!

- நிலவு