Wednesday, October 19, 2011
Sunday, September 11, 2011
Friday, May 20, 2011
புரிந்துகொண்டேன்
என்று இருந்தேன்....!
உன் பிரிவில்
உன் பிரிவில்
நீ என் மேல் வைத்த
அன்பு பொய்யானது
என்பதை புரிந்துகொண்டேன் ....!
-நிலவு
Tuesday, May 3, 2011
தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...
காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!
பாசத்தை தேடி வெகுதுரம்
பயணித்தும் வெறும்
கானல்கள் மட்டுமே
என் கண்களை ஏமாற்றி ..
வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே
என்னை பின் தொடர்கின்றது.....!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Saturday, April 30, 2011
உன் மனசாட்சியை தொட்டு
தோழனே....! என்னை பிடிக்கும்
என்று தான் சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான் பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் ?
உன் மனசாட்சியை தொட்டு சொல்லிவிடு
என் மனதை தொடுவதற்காக சொல்லி விடாதே .....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
நம் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாக உன்னை பிரிகின்றேன்....
நீ நிரந்தரமாக என்னை பிரிவதற்குள்......!
கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறக்க வைக்கின்றேன் ....!
நான் ... நிரந்தரமாக மறைவதற்குள்...!
நான் உன் பிரிவை தாங்க வேண்டும்.....!
நீ என் மறைவை தாங்க வேண்டும்......!
-நிலவு
என் மனம் சொல்கின்றது
நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....
உதடுகள் புன்னகைத்தது
என் கவிதைகளில் நீ என்
தோழனாயிருந்தாய்,
நீ தோழனாய் மட்டுமல்ல
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று
மனது மட்டும்
அழுதுகொண்டே சொன்னது....!
என்னை விட என் கவிதைகள்
உன்னை காதலிதிருகின்றன....!
- நிலவு
சிறு குழந்தையாய் .....!
வேண்டாம் என்று உதறி தள்ளியது உன் உறவு
வேண்டும் என்று கை கொடுக்கின்றது நட்பு
வேண்டாம் என்று உதறிய உறவை தொடரவா?
கை கொடுக்கும் நட்பை தொடரவா ?
விடை புரியாமல் தடுமாறுகின்றேன்
சிறு குழந்தையாய் .....!
- நிலவு
Tuesday, April 5, 2011
சுடும் நிலவு
தூரத்தில் நிலவை பிடிக்காதவர் யார் ??
கொஞ்சம் நெருங்கித்தான் பார் சுட்டுவிடும் என்றேன் ...!
ஹ்ம்ம்..........!நெருங்கித்தான்
பார்ப்போமே......சுற்றுவிடவா போகிறது என்றாய்....!
நெருங்கியும் பார்த்தாய்...!
இன்று
சுட்டு விட்டதோ நிலவு ?
நீ ஒரு துருவம் நான் ஒரு துருவமாய்.....
நாம் இன்று விழகி நிற்கின்றோம்....!
அன்று ரசிகனாய் ரசித்த நிலவு
உனக்கு பிடித்த நிலவு
இன்று உனக்கு பிடிக்காத நிலவு....!
உன்னிடம் இருந்து தூரமாக
நிற்கும் அதே நிலவு .....!
இப்படிக்கு நிலா.....
- நிலவு
கொஞ்சம் நெருங்கித்தான் பார் சுட்டுவிடும் என்றேன் ...!
ஹ்ம்ம்..........!நெருங்கித்தான்
பார்ப்போமே......சுற்றுவிடவா போகிறது என்றாய்....!
நெருங்கியும் பார்த்தாய்...!
இன்று
சுட்டு விட்டதோ நிலவு ?
நீ ஒரு துருவம் நான் ஒரு துருவமாய்.....
நாம் இன்று விழகி நிற்கின்றோம்....!
அன்று ரசிகனாய் ரசித்த நிலவு
உனக்கு பிடித்த நிலவு
இன்று உனக்கு பிடிக்காத நிலவு....!
உன்னிடம் இருந்து தூரமாக
நிற்கும் அதே நிலவு .....!
இப்படிக்கு நிலா.....
- நிலவு
Sunday, December 5, 2010
Saturday, December 4, 2010
நினைவுகளே தொலைந்துவிடு
*********
பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள் இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....
மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!
பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள் இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....
*********
மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
**********
உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!
- நிலவு
Tuesday, November 30, 2010
Wednesday, November 17, 2010
அன்புக்காக
நீ ....நினைப்பது
நம் அன்பை துண்டிக்க
நான்.... நினைப்பது
நம் அன்பை தொடர.....
உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...
பாவம் அறியாது கபடமற்ற என் நெஞ்சம்....
உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது
உன் அன்பிற்காக...
.
அன்புடன்,,,,,
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Sunday, November 7, 2010
இடைவெளி
உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...
நம் நட்பிற்குள் உள்ள
ஒரு சிறு இடைவெளியை
நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்
திடீர் என்றொரு மின்னல் கீற்று.....
மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........
இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?
விடை தெரியாமல் நாம்.....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)

















