Sunday, August 22, 2010

கருவறைச் சுகம்

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்

உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின் மத்தியிலே

என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை

என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது


என் உலகம்

மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்-  சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!

உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

         -ஜாவிட் ரயிஸ்


.

No comments:

Post a Comment