Tuesday, August 31, 2010

நட்பு பாதை








தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....

தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....

*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......

நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்

*********
இன்று நீயே....

பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி

நீ எங்கோ நான் எங்கோ....

**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!

*********
நட்புடன்...

- நிலவு

Wednesday, August 25, 2010

ஹலோ!

நீ என்னுடன் பேசாவிட்டாலும்
நான் உன்னுடன் பேசாவிட்டாலும்
உன் "ஹலோ"
என்ற குரலை கேட்க
தினம் உன் தொலைபேசி
என்னை சுழற்றுகிறேன்
உனக்கு தெரியுமா? 

- நிலவு 


.

பிரிவு

பாதியில் பிரிந்து சென்றாய்!
பாவை மனதை
பறித்து சென்றாய்!
போனது போய்விட்டாய்


ஏன் உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் சென்றாய்?
உன் நினைவுகளால்
உருகி... உருகி...
என் உயிரையும்
பிரித்து செல்லத் தானோ?   


- நிலவு 




/

Monday, August 23, 2010

உன் இதயத்திடம் கேள்!

யாரை நேசிக்கிறாய்
என்று
என்னிடம் கேட்காதே!

உன் இதயத்திடம் கேள் !

காரணம்...
என் இதயம் உன்னிடத்தில்


- நிலவு 


.

உன்னிடமே

நீ என்னிடம் இருந்து ஒரு படி
விலகி நின்றால்...
நான் இரு படி விலகி நிற்க
நினைக்கிறேன்!

முடியவில்லை...

உன்னிடமே
இன்னொரு படி அதிகமாக
நெருங்குகிறேன்
என்று உணர்கிறேன் 


- நிலவு 


.

Sunday, August 22, 2010

அன்புத் தோழன்

என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...

எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்

இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!

தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. ! 




- நிலவு 



.

இறந்துகொண்டு இருக்கிறேன்

 உன் கடும் வார்த்தைகளால்
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்

உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்

நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!

இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!



- நிலவு 



.

உன் பெயர் சொல்லும்

என் இதய துடிப்பை
உன்னால் உணரமுடியவில்லை
என்றாலும்

என் நாடித்துடிப்பை உணர்ந்து பார்
ஒவ்வொன்றும்
உன் பெயர் சொல்லும் 

- நிலவு 


.

உன் முடிவில் என் ஆரம்பம்...

அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?

இன்றுவரை புரியவில்லை

நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....

முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு 


.

என் பிரிவிலும்

உனக்கு கவிதைகள் பிடிக்காது
என்றும் தெரியும்
உன் இதயத்தில் ஈரம் இல்லை என்றும்
எனக்கு தெரியும்
இருந்தும்...

என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை
படிக்க நேர்ந்தால் ...

என் கவிதைகளும்
உன்னை எந்த அளவு நேசித்தது
என்று உனக்கு புரியும்

பின்பாவது ஒரு சொட்டு
கண்ணீரின் ஈரம்
போதும் என் கல்லறை
ரோஜாவிற்கு  


- நிலவு 


.

என் கனவு


உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்.....
...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது

என்று புரிந்து கொண்டேன்... 

- நிலவு 


.

கருவறைச் சுகம்

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்

உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின் மத்தியிலே

என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை

என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது


என் உலகம்

மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்-  சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!

உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

         -ஜாவிட் ரயிஸ்


.

விதி வைத்த முற்றுப்புள்ளி

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய்  பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

          -ஜாவிட் ரயிஸ்




.

சிறகிழந்து போனேன் தோழி

சகியே!- என் சகியே
தனியே நான் நீயெங்கே?

 
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?

 
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே

 
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்

 
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!


  -ஜாவிட் ரயிஸ்

.

என்னையும் கவிஞன் ஆக்கியதற்கு நன்றி!!!

என்னையும் கவிஞன் ஆகியதற்கு நன்றி!!!

அன்று என் புன்னகை கவிதை ஆகியது !
இன்று என் கண்ணீர் கவிதை ஆகியது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று உலகை நான் ரசித்தேன் !
இன்று உலகம் என்னை ரசிக்கிறது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நீ என் அருகில் - என் நினைவில் நீ !
இன்று நீ தொலைவில் - என் நினைவில் நீயே !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்கபோவதை யோசித்தேன் !
இன்றோ நடந்ததை நேசிக்கிறேன் !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்காது என்ற பொது நடந்தது...
நடக்கும் என நினைத்த பொது முடிந்தது...
முடிந்ததெல்லாம் இன்று வடிந்தது...
நீயி...
நீராய்...
கண்ணீராய் .....

என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....


Regards,
Vijee

இதயத்திருடன்